மத்திய–மாநில அரசுகளை கண்டித்து ஏரலில் நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம்


மத்திய–மாநில அரசுகளை கண்டித்து ஏரலில் நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Aug 2017 4:30 AM IST (Updated: 14 Aug 2017 12:12 AM IST)
t-max-icont-min-icon

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஏரலில் நாளை மறுநாள்(புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்த, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள், விவசாய அமைப்புகள் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்பிக்நகர்,

தூத்துக்குடியை அடுத்த ஸ்பிக்நகரில் உள்ள தி.மு.க. தெற்கு மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ஜாகீர் உசேன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல தலைவர் தமிழ் இனியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கம் சார்பில் விவசாயிகளை கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உயர்நீதிமன்றம் அனைத்து விவசாயிகள் கடனையும் ரத்து செய்ய உத்தரவிட்டும் அதனை அமல்படுத்தாமல், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த தமிழக அரசை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் வருகிற 16–ந்தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் வருகிற 16–ந்தேதி (நாளை மறுநாள்) காலை 10 மணிக்கு நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வினரும், பிற கட்சி நிர்வாகிகள், விவசாய அமைப்புகள் அனைத்தும் கலந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சண்முகவேல், ஆதித்தமிழர் பேரவை மாநில அமைப்பு செயலாளர் அருந்ததி அரசு, திராவிடர் கழக மண்டல தலைவர் பால் ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்டு உதவி செயலாளர் கரும்பண், ஆனந்தமூர்த்தி, முத்தையாபுரம் தி.மு.க. பகுதி செயலாளர் கருணாகரன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ரவி, மகாராஜன், சண்முகையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story