முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் நகை, பணம் திருட்டு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் நகை, பணம் திருட்டு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 14 Aug 2017 3:45 AM IST (Updated: 14 Aug 2017 12:13 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில், முன்னாள் ராணுவ வீரரின் வீட்டில் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் வடசேரி பரதர் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 72), முன்னாள் ராணுவ வீரர். இவர் நேற்று முன்தினம், வீட்டை பூட்டிவிட்டு நெல்லையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு  சென்றார்.

 பின்னர் நேற்று காலையில், மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு  அதிர்ச்சியடைந்தார்.

உடனே வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு இருந்த துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும், வீட்டில் பீரோவில் இருந்த 3 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் மற்றும் விலைஉயர்ந்த செல்போன் ஒன்று ஆகியவை திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

வலைவீச்சு

இது குறித்து வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அக்கம்பக்கத்தினரிடையே விசாரணை நடத்தினர்.

மேலும், மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.


Related Tags :
Next Story