பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 10 பேர் கைது


பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 10 பேர் கைது
x
தினத்தந்தி 14 Aug 2017 3:15 AM IST (Updated: 14 Aug 2017 1:55 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சீபுரம்,

இந்திய சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவின் பேரில் காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு முகிலன் மேற்பார்வையில் போலீசார் காஞ்சீபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

போலீசாரை பார்த்ததும் காஞ்சீபுரம் பல்லவர் மேடு பகுதியை சேர்ந்த அஜித் என்ற சதீஷ்குமார் (வயது 23), அசோக் குமார் (22), காஞ்சீபுரம் பூக்கடைச்சத்திரத்தை சேர்ந்த பழனி (34), சின்ன காஞ்சீபுரம் சுக்லாபாளையம் கோவிந்ததெருவை சேர்ந்த டிராவிட் (23), காஞ்சீபுரம் திருப்பருத்திகுன்றத்தை சேர்ந்த கோபி (31), ஆனந்தன் (31), காஞ்சீபுரம் மாண்டு கன்னீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்த பாஸ்கர்(30), காஞ்சீபுரம் கவரைதெருவை சேர்ந்த கமலக்கண்ணன் (47), காஞ்சீபுரம் கேதுராஜதெருவை சேர்ந்த சுரேஷ் குமார் (37), காஞ்சீபுரத்தை சேர்ந்த கார்த்திகேயன் (52) ஆகியோர் தப்பி ஓட முயன்றனர்.

அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.


Next Story