அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி அன்புமணி ராமதாஸ் விழிப்புணர்வு பயணம்
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி, அத்திக்கடவில் இருந்து குன்னத்தூர் வரை டாக்டர் அன்புமணி ராமதாஸ் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டார்.
திருப்பூர்,
அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக்கோரி பா.ம.க. இளைஞரணி தலைவரும், எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் அத்திக்கடவில் இருந்து நேற்று மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டார். இந்த விழிப்புணர்வு பயணத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தலைவர் தெய்வசிகாமணி கொடியசைத்து தொடங்கிவைத்தார். அன்னூரை தொடர்ந்து அவினாசி புதிய பஸ் நிலையம் முன் பிரசார கூட்டம் நடந்தது. கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் வடிவேல் வரவேற்று பேசினார். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி சிறப்புரையாற்றினார். பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தலைமை தாங்கி பேசியதாவது:-
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி கொங்கு மண்டல இளைஞர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை இங்கு நடத்தினார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் இங்கு திரண்டனர். இதற்கு நானும் வந்து ஆதரவு கொடுத்து பங்கேற்றேன். இதைப்பார்த்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அத்திக்கடவு-அவினாசி திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார். அதற்காக ரூ.3¼ கோடி ஒதுக்கீடு செய்தார். அதை நம்பி ஜெயலலிதாவுக்கு ஓட்டு போட்டு மீண்டும் அவரை முதல்-அமைச்சராக தேர்வு செய்தீர்கள். ஆனால் இன்று உங்களுக்கு கிடைத்தது ஏமாற்றம் தான்.
அவினாசி பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் 1,800 அடிக்கு கீழ் போய்விட்டது. ஆழ்துளை கிணறு அமைக்க அதிக செலவாகிறது. இதற்கு காரணம் 50 ஆண்டுகால திராவிட ஆட்சிக்கு நீர்மேலாண்மை பற்றி தெரியாது. திராவிட கட்சிகாரர்களுக்கு வசனம் பேச தெரியும். நடிக்க தெரியும். அடுக்குமொழியில் பேச தெரியும். அதை நம்பி நீங்கள் வாக்களித்து இன்று ஏமாளிகளாக இருக்கிறீர்கள். நான் இங்கு வந்ததற்கு நோக்கம், இளைஞர்களே நீங்கள் விழித்துக்கொள்ளுங்கள் என்பதற்காகத்தான்.
இந்த திட்டத்தை நிறைவேற்ற முன்னாள் எம்.எல்.ஏ. மாரப்பன் தலைமையில் 1956-ம் ஆண்டு முதல் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. பின்னர் 1962-ம் ஆண்டு காமராஜர் இந்த திட்டத்தை கொண்டு வருவோம் என்று அறிவித்தார். அப்போது இந்த திட்டத்தின் மதிப்பு வெறும் ரூ.10 கோடியாகும். திராவிட ஆட்சிகள் 50 ஆண்டுகள் நடந்தது. தொடர்ந்து வந்த முதல்- அமைச்சர்கள் இந்த திட்டத்தை அறிவித்தாலும் நிறைவேற்றவில்லை.
உபரி நீரை பயன்படுத்தும் இந்த திட்டத்தை எளிதாக நிறைவேற்றலாம். ஆண்டுக்கு 19 டி.எம்.சி. தண்ணீர் காவிரியில் சென்று கடலில் கலக்கிறது. இந்த தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் போதுமான அணைகள் இல்லை. 1.2 டி.எம்.சி. தண்ணீரே அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு போதுமானதாகும். பில்லூர் அணைப்பகுதியில் இருந்து வாய்க்கால் மூலமாக அன்னூருக்கும், அங்கிருந்து கிளை வாய்க்கால் மூலமாக அவினாசிக்கும், பெருந்துறைக்கும் கொண்டு வரும் திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலமாக 31 ஏரிகள், 40 ஊராட்சி மன்ற ஏரிகள், 701 நீர் நிலைகள் நிரம்பும். இவற்றில் நீர் நிரம்பினால் நிலத்தடி நீர் பெருகும். சுமார் 50 லட்சம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும். 3 மாவட்டங்கள், 7 சட்டமன்ற தொகுதிகள், 4 பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்தவர்கள் பயன்பெறுவார்கள். 1½ லட்சம் ஏக்கர் நிலம் கூடுதலாக பாசன வசதி பெறும்.
தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்காதீர்கள். ஒருமுறை இந்த 2 கட்சிகளையும் ஒதுக்கி மாற்றி வாக்களியுங்கள். இவர்களுக்கு புதிய திட்டங்கள் தெரியாது. இவர்களுக்கு கொள்ளையடிக்கவும், ஊழல் செய்யவும் தெரியும். நீர்மேலாண்மை பற்றி தெரியாது. எங்களிடம் வாருங்கள், நாங்கள் நீர்மேலாண்மை பற்றி கற்றுக்கொடுக்கிறோம். தமிழகத்தில் மாவட்டம் வாரியாக உள்ள 20 நீர்பாசன திட்டங்களை நிறைவேற்ற ரூ.40 ஆயிரம் கோடி செலவாகும்.
அ.தி.மு.க. ஆட்சியில் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி திட்டத்துக்கு மட்டும் ரூ.62 ஆயிரம் கோடியை செலவு செய்தார்கள். அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்ற ரூ.3,523 கோடி செலவாகும் என்று கூறுகிறார்கள். ஆனால் தமிழக அரசு கேபிள் டி.வி. செட்ஆப் பாக்ஸ்களை ரூ.3,500 கோடிக்கு வாங்க திட்டமிட்டுள்ளது.
நீங்கள் மாறாவிட்டால் ஆண்டவனால் அல்ல...யாராலும் உங்களை காப்பாற்ற முடியாது. வேலைவாய்ப்பு, சுகாதாரம், தொழில் முன்னேற்றம், பொருளாதாரம் முன்னேற வேண்டும் என்றால் அ.தி.மு.க., தி.மு.க.வை ஒதுக்குங்கள். நல்லவர்களுக்கு வாக்களியுங்கள். பா.ம.க.வை தவிர மற்றவர்களுக்கு அந்த தகுதி கிடையாது. எங்களிடம் ஆட்சியை கொடுத்தால் கல்வி, நீர்மேலாண்மை, தொழில்வளர்ச்சிக்கு அதிக முதலீடு செய்யப்படும். இலவசம் கொடுக்க மாட்டோம்.
இந்த பகுதியில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை, காளிங்கராயன்-காரமடை திட்டம் என்று முதல்-அமைச்சர் அறிவித்து ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்து நீரேற்றும் முறையில் தண்ணீர் கொண்டு செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 135 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீரேற்றம் செய்து தண்ணீரை கொண்டு வர முடியுமா?. இயற்கை ஓட்டத்தில் தண்ணீர் கொண்டு வர வேண்டும். இந்த பகுதி ஓட்டகத்தின் முதுகு போன்ற அமைப்பை கொண்டது. நீரேற்ற முறையில் எப்படி தண்ணீர் கொண்டு வருவது எப்படி சாத்தியமாகும். கடந்த 1962-ம் ஆண்டு காமராஜர் அறிவித்த அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை அப்படியே நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். எத்தனை கோடி ரூபாய் செலவானாலும் அந்த திட்டத்தைத்தான் நிறைவேற்ற வேண்டும். இந்த திட்டம் தான் சாத்தியமாக அமையும்.
அ.தி.மு.க. மீது மக்களிடம் கோபம் உள்ளது. ஆனால் தி.மு.க. நல்லவர்கள் என்று அவர்களுக்கு ஓட்டு போட்டுவிடாதீர்கள். தி.மு.க. தான் மிகப்பெரிய ஊழலான 2ஜி ஊழல் செய்தனர். எங்களுக்கு ஒருமுறை வாய்ப்பு தந்து பாருங்கள். 5 ஆண்டுகள் மட்டும் எங்களுக்கு போதும். அதற்கு மேல் வேண்டாம். 1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்க முடியும். தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற முடியும். அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்ற கட்சி வேறுபாடு பார்க்காமல் அனைவரும் ஒன்று சேருங்கள். இது முதல்கட்ட பிரசாரம். இதைத்தாண்டி போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
முதல்-அமைச்சர் அறிவித்த அத்திக்கடவு- அவினாசி திட்டம் வெற்றி பெறாது. பழைய திட்டம் வந்தால் தான் சரியாக இருக்கும். ஆனால் அமைச்சர் செங்கோட்டையன் இங்குள்ள மக்களிடம் பேசி இதுகுறித்து போராட வேண்டாம் என்று தெரிவித்து வருகிறார். திட்டம் வந்தால் போதும் என்று மக்களும் உள்ளனர்.
தமிழகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய 20 நீர்த்திட்டங்கள் மற்றும் அத்திக் கடவு-அவினாசி திட்டம் குறித்து தேவைப்பட்டால் முதல்-அமைச்சரை சந்தித்து வலியுறுத்துவேன். அமைச்சர் செங்கோட்டையன் விவாதம் நடத்த அவர் தான் அழைத்தார். ஆனால் நாங்கள் விவாதத்துக்கு ஏற்பாடு செய்தோம். அவர் வரவில்லை. ஆரோக்கியமான விவாதம் நடத்த வேண்டும் என்பதே எனது நோக்கம். தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியல் கலாசாரம் உருவாக வேண்டும். கல்வித்தரத்தை உயர்த்துவது குறித்து அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து ஆலோசனை கூற தயாராக உள்ளேன். இதில் எனக்கு ஈகோ எதுவும் கிடையாது.
கல்வித்துறை அதிகாரி உதயசந்திரனை மாற்ற நீதிமன்றம் தடை விதித்தது நல்லது. அது எங்களால் தான் நடந்தது. நேர்மையான அதிகாரி அவர். இப்போது இருக்கும் அதிகாரிகளில் அவர் அரிதானவர். கல்வித்துறையில் நல்ல மாற்றங்களை உதயசந்திரன் கொண்டு வந்தார். அவரை செயல்பட விட்ட அமைச்சர் செங்கோட்டையனையும் பாராட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story