திருவட்டாரில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 259 பேர் கைது
திருவட்டாரில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையொட்டி 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 259 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவட்டார்,
திருவட்டாரை அடுத்துள்ள மாவறவிளை பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கணவன் –மனைவி பிரச்சினையில் கணவன் கைவிட்டதால் அந்த பெண் கணவர் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது ஏற்பட்ட மோதலின் காரணமாக அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் காங்கிரஸ் பிரமுகர் உள்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
காங்கிரஸ் பிரமுகருக்கும், இந்த வழக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே இந்த வழக்கை திரும்ப பெறுமாறு காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரசார் திருவட்டார் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட போவதாக அறிவித்து இருந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை 10 மணியளவில் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் செல்வகுமார், மாவட்ட துணைத்தலைவர் ரத்தினகுமார், வட்டார தலைவர் ஜெகன்ராஜ், இளைஞர் காங்கிரஸ் மாட்ட தலைவர் லாரன்ஸ், மாவட்ட செயலாளர் மகேஷ் லாசர், ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட தலைவர் அனந்த கிருஷ்ணன், ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் மேற்கு மாவட்ட தலைவர் சாமுவேல் ஜார்ஜ் உள்பட காங்கிரசார் ஏராளமானோர் திருவட்டார் பஸ்நிலையத்தில் குவிந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படாததால் போலீசார் அவர்களை கலைந்து செல்லுங்கள். இல்லை என்றால் கைது செய்வோம் என்று எச்சரித்தனர். இதில் போலீசாருக்கும் காங்கிரசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் காங்கிரசார் போலீஸ் நிலையம் வரை ஊர்வலமாக நடந்து செல்வதாக கூறி சிறிது தூரம் நடந்து சென்றனர். திடீரென்று அவர்கள் மார்த்தாண்டம்–குலசேகரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனே சாலைமறியலில் ஈடுபட்ட 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 259 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Related Tags :
Next Story