சின்னசேலம் அருகே பால் கொள்முதல் நிலையம் முன்பு விவசாயிகள் சாலை மறியல்
சின்னசேலம் அருகே பால் கொள்முதல் நிலையம் முன்பு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சின்னசேலம்,
சின்னசேலம் அருகே நயினார்பாளையம் சேலம்-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பால் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த நிலையத்துக்கு சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் மாடுகளில் இருந்து கறக்கும் பாலை இங்கு கொண்டு வந்து கொடுப்பார்கள். நாள்தோறும் காலை, மாலை என இருவேளைகளிலும் ஆயிரம் லிட்டருக்கு மேல் விவசாயிகள் பால் கொண்டு வருவார்கள்.
இந்த நிலையில் விவசாயிகள் கொண்டு வரும் பாலின் தரம் குறைவாக உள்ளது என்றும், கொழுப்பு இல்லை என்றும் கூறி லிட்டருக்கு ரூ.20 மதிப்பீடு செய்து பதிவு செய்யப்பட்டது. மேலும் பல விவசாயிகள் கொண்டு வந்த பாலை ஊழியர்கள் வாங்க மறுத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று காலையில் சேலம்-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பால் கொள்முதல் நிலையம் முன்பு பால் கேனுடன் திரண்டு வந்தனர். தொடர்ந்து அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கொள்முதல் நிலைய ஊழியர்கள் தொடர்ந்து பாலை வாங்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த கீழ்க்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சங்கரசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் தொடர்ந்து பால் கொள்முதல் செய்யஅதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story