போலீஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து உதிரிபாகங்கள் திருட்டு
பாப்பாநாடு போலீஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து உதிரிபாகங்களை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஒரத்தநாடு,
தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு போலீஸ் சரகத்தில் வசிக்கும் ஒருவரை கடந்த சில நாட்களுக்கு முன் பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை காரணமாக சிலர் காரில் கடத்தி சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்து அந்த காரை பாப்பாநாடு போலீஸ் நிலையத்தின் எதிரே உள்ள வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். சம்பவத்தன்று இரவு போலீஸ் நிலைய வளாகத்துக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்து காருக்குள் பொருத்தி இருந்த பேட்டரி உள்ளிட்ட விலை உயர்ந்த சில உதிரிபாகங்களை திருடி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது
போலீஸ் நிலையத்தின் வளாகத்தில் புகுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து உதிரி பாகங்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்ற சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் உயர் அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story