கச்சா எண்ணெய் கசிந்த வயலில் இருந்து மண்ணை அதிகாரிகள் ஆய்வுக்கு எடுத்து சென்றனர்


கச்சா எண்ணெய் கசிந்த வயலில் இருந்து மண்ணை அதிகாரிகள் ஆய்வுக்கு எடுத்து சென்றனர்
x
தினத்தந்தி 15 Aug 2017 4:00 AM IST (Updated: 15 Aug 2017 2:35 AM IST)
t-max-icont-min-icon

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. குழாயில் உடைப்பு ஏற்்பட்டு கச்சா எண்ணெய் கசிந்த வயலில் இருந்து மண்ணை அதிகாரிகள் ஆய்வுக்கு எடு்த்து சென்றனர்.

திருவாலங்காடு,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஓ.என்.ஜி.சி. குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஸ்ரீராம் என்பவரின் வயலில் கச்சா எண்ணெய் கசிந்தது. இந்த வயலில் கச்சா எண்ணெய் பரவியதால் தொடர்ந்து விவசாயம் செய்வது கேள்விக்குறியானது. ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வயலில் படர்ந்திருந்த கச்சா எண்ணெய்யை அகற்றும் பணியில் ஈடுபட்டது.

இந்த வயலில் உள்ள மண்ணை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

ஆய்வு

நேற்று மாலை திருவிடைமருதூர் தாசில்தார் கணேஷ்வரன் முன்னிலையில் காட்டுத்தோட்டம் மண்ணியல் மேலாண்மை ஆராய்்ச்சி நிலைய பேராசிரியர் பாபு பாதிக்கப்பட்ட வயல் பகுதியிலிருந்து ஆய்வு செய்வதற்காக கச்சா எண்ணை படர்ந்த மண்ணை எடுத்தார்.

மேலும் அருகே பாதிக்கப்படாத வயல் பகுதிகளிலிருந்து சோதனைக்காக மண் எடுக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் வயல் முழுவதும் தண்ணீர் தேங்கிருந்தது. இப்பணியின் போது திருப்பனந்தாள் வேளாண்மை உதவி அலுவலர் கார்த்திகேயன், ஓ.என்.ஜி.சி. உற்பத்தி பிரிவு முதன்மை மேலாளர் கருணாகரன், சிவில் பிரிவு மேலாளர் ஜோசப், நிதி நிர்வாக பிரிவை சேர்ந்த மணிவண்ணன், வயல் உரிமையாளர் ஸ்ரீராம் ஆகியோர் இருந்தனர். 

Next Story