தாலி காணிக்கை வேலு நாச்சியார்
இந்திய மண்ணில் விடுதலைக்காக போராடிய முதல் பெண்மணி வீரமங்கை வேலு நாச்சியார்.
மன்னரான தன் கணவரை கொன்ற ஆங்கில படைகளை வீழ்த்திய பின்னரே திரும்புவேன் என்று சபதமேற்ற அவர், ஒரு படையுடன் சென்று எதிரிகளை வீழ்த்தி, அவர்களிடம் சிக்கிய காளையர் கோவில் பகுதியை மீட்டு வந்தார். அதன்பிறகே அரசியாக பொறுப்பேற்றார்.
சிவகங்கை கோட்டையில் ஆங்கிலேய கொடியை இறக்கி தனது கொடியை பறக்கச் செய்தார். தன்னை தேடி வந்த வெள்ளையர்களிடம் தன்னை காட்டிக் கொடுக்காமல் உயிர் நீத்த வீரன் உடையாருக்கு வீரக்கல் நட்டு அஞ்சலி செலுத்தினார். கணவரை இழந்த துக்கத்தில் தாலியை கழற்றாமல் போர்க்களம் கண்ட அவர், வீரனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தன் திருமாங்கல்யத்தை காணிக்கையாக்கினார்.

Related Tags :
Next Story