தனியார் தொழிற்சாலை அமைக்க 3 கிராமமக்கள் எதிர்ப்பு கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்
சேந்தமங்கலம் அருகே தனியார் தொழிற்சாலை அமைக்க 3 கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.
சேந்தமங்கலம்,
சேந்தமங்கலம் அருகே உள்ள எஸ்.பழையபாளையம் ஊராட்சியில் சுதந்திர தின விழாவையொட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி எழுத்தர் நடேசன் தலைமை தாங்கினார். இதில் எஸ்.பழையபாளையம், போடிநாயக்கன்பட்டி, சிவநாயக்கன்பட்டி ஆகிய 3 கிராமமக்கள் கலந்து கொண்டனர். அப்போது கிராமமக்கள் கிராமசபை கூட்டத்தில் கரிய பெருமாள் ஏரிக்கு செல்லும் வழியில் தனியார் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த கூட்டத்தில் மக்கள் உரிமை சங்க மாவட்ட செயலாளர் பூபாலன் மற்றும் பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், எஸ்.பழையபாளையம் ஊராட்சியில் இருந்து கரிய பெருமாள் ஏரிக்கு செல்லும் வழியில் ஒரு தனியார் தொழிற்சாலை அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அங்கு தொழிற்சாலை அமைந்தால் இதில் இருந்து வெளியேற்றப்படும் புகையால் காற்று மாசுபடும்.
தீர்மானம் நிறைவேற்றம்
அதனால் பொதுமக்கள், கால்நடைகளுக்கு சுவாச கோளாறு ஏற்படும். இதனால் தனியார் தொழிற்சாலை அமைக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஊராட்சி எழுத்தர் எருமப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பிரபாகரனுக்கு தகவல் தெரிவித்தார். அவருடைய ஆலோசனையின்படி தனியார் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதற்கு தடை விதிக்கும் தீர்மானம் கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
தனியார் தொழிற்சாலை அமைக்க 3 கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story