குருபரப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் பலி


குருபரப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் பலி
x
தினத்தந்தி 15 Aug 2017 10:45 PM GMT (Updated: 2017-08-16T02:55:13+05:30)

குருபரப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள மாரசந்திரத்தைச் சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (வயது 25). இவர் திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் ஊருக்கு வந்திருந்த அவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் குருபரப்பள்ளி அருகே உள்ள குப்பச்சிப்பாறை பக்கமாக சென்று கொண்டிருந்தார்.

அந்த நேரம் மேலுமலையைச் சேர்ந்த ஜீனப்பா (55) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தார். குப்பச்சிப்பாறை அருகில் சென்ற போது 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் ராஜீவ்காந்தி மற்றும் ஜீனப்பா ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

போலீசார் விசாரணை

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குருபரப்பள்ளி போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு சென்று பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக குருபரப்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Tags :
Next Story