கும்பகோணம் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் சங்க கொடிக்கம்பம் உடைப்பு
கும்பகோணம் நீதிமன்ற வளாகத்தில் இருந்த வக்கீல் சங்க கொடிக்கம்பம் உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.
கும்பகோணம்,
கும்பகோணம் நீதிமன்ற வளாகத்தின் வாயிலில் கும்பகோணம் வக்கீல் சங்கம் சார்பில் இரும்பினாலான கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின விழாவிற்கு கொடி ஏற்றுவதற்காக கொடிக்கம்பத்துக்கு வர்ணம் பூசி விட்டு நேற்று முன்தினம் பணியாளர்கள் சென்றுள்ளனர். பின்னர் நேற்று காலை சுதந்திர தின விழாவையொட்டி கொடி ஏற்ற வக்கீல்கள் வந்துள்ளனர். அப்போது கொடிக்கம்பம் உடைக்கப்பட்டு, 2 துண்டுகளாக கிடந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வக்கீல்கள், சங்க தலைவர் ராஜசேகரனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு ராஜசேகரன் வந்தார். இதையடுத்து கீழே உடைந்து கிடந்த கொடிக்கம்பத்தை விட்டுவிட்டு, மீதம் இருந்த கொடிக்கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.
புகார்
பின்னர் இது குறித்து கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சங்க தலைவர் ராஜசேகரன் புகார் அளித்தார்.புகாரில் சுமார் 15 அடி உயரமுள்ள இரும்பினாலான கொடிக்கம்பத்தை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். எனவே இதில் சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story