காஞ்சீபுரம் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கலெக்டர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை
காஞ்சீபுரம் மாவட்டத்தில் சுதந்திர தின விழாவையொட்டி கலெக்டர் பொன்னையா தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் அறிஞர் அண்ணா காவல் அரங்கத்தில் சுதந்திரதின விழா நடந்தது. தேசிய கொடியை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா ஏற்றிவைத்து போலீஸ், ஊர்காவல்படை உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பிறகு திறந்த ஜீப்பில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார்.
பின்னர் கலெக்டர் பொன்னையா ஓய்வு பெற்ற தியாகிகளை கதர் ஆடை அணிவித்து கவுரவித்தார். முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் திருமண உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளாக மொத்தம் ரூ.73 லட்சத்து 75 ஆயிரத்து 763- ஐ கலெக்டர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் துறை அதிகாரி க.சவுரிராஜன், காஞ்சீபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. தேன்மொழி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, மாவட்ட பொதுப்பணித்துறை உயரதிகாரி முத்தையா, மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயகுமார், காஞ்சீபுரம் வருவாய் கோட்ட அதிகாரி பன்னீர்செல்வம், காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
காஞ்சீபுரம் முத்தியால்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் தேசிய கொடியை முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் ஏற்றிவைத்து இனிப்புகளை வழங்கினார். காஞ்சீபுரம் ஸ்ரீசங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தூய்மை பாரதம் என்னும் பொருளில் காஞ்சீபுரம் பூக்கடைச்சத்திரத்தில் இருந்து ஏனாத்தூர் கல்லூரி வரை மாணவ-மாணவிகள் பேரணி நடந்தது. கல்லூரி தலைவர் வி.பி. குமாரகிருஷ்ணன் கலந்துகொண்டு பேரணியை தொடங்கி வைத்தார். கல்லூரி செயலாளர் வி.பி.ரிஷிகேசன் சங்கரா கல்லூரியில் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். கல்லூரி முதல்வர் வெங்கடேசன் இனிப்புகளை வழங்கினார்.
சமபந்தி விருந்து
சோழன் கல்வி குழுமத்தின் தலைவர் சஞ்சீவி ஜெயராம், தூசி பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் ஆறுமுகம், காஞ்சீபுரம் பஞ்சிப்பேட்டை பெரிய தெருவில் உள்ள ஒலிம்பியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய கொடியை இயக்குனர் சங்கரநாராயணன், காஞ்சீபுரத்தை அடுத்த வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேசிய கொடியை பள்ளி நிறுவனர் சாந்தி அஜய்குமார் ஏற்றினர்.
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சுதந்திரதின விழா வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நடந்தது. மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா சமபந்தி விருந்தில் கலந்துகொண்டார். கோவில் செயல் அலுவலர் முருகேசன் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார். மேலும் காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். கோவில் செயல் அலுவலர் விஜயன் ஏற்பாடுகனை செய்திருந்தார்.
காஞ்சீபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரமணி, செயல் அலுவலர் வெள்ளைச்சாமி ஆகியோர் செய்திருந்தனர்.
கூட்டுறவு வங்கி
காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் நடந்த சுந்திர தின விழாவில் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தேசிய கொடியை ஏற்றிவைத்தார். இதில் பொது மேலாளர் அதியமான், உதவி பொது மேலாளர்கள் ரமாதேவி, சரவணன், ராஜேந்திரன், தொழிற்சங்க அமைப்பு செயலாளர் குணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சீபுரம் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சந்திரசேகரன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் கண்காணிப்பாளர்கள் சேகர், சீனிவாசன், அமுதா, நாராயணமூர்த்தி, காஞ்சீபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் சத்தியநாராயணன், கூட்டுறவு சார்பதிவாளர் மாலதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு ஒருங்கிணைந்த கோர்ட்டில் காஞ்சீபுரம் மாவட்ட நீதிபதி செல்வகுமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். செங்கல்பட்டு எம்.எல்.ஏ.அலுவலகத்தில் வரலட்சுமி மதுசூதனன். எம்.எல்.ஏ. தேசிய கொடியை ஏற்றினார். செங்கல்பட்டு வருவாய் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. ஜெயசீலன் தேசிய கொடியை ஏற்றினார். செங்கல்பட்டு மாவட்ட சிறைச்சாலையில் சிறைத்துறை அதிகாரி குணசேகரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். செங்கல்பட்டு சக்தி விநாயகர் கோவிலில் சமபந்தி விருந்து செயல் அலுவலர் செந்தில்குமார், கணக்கர் நரசிம்மன் தலைமையில் நடந்தது.
செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கலைக்கல்லூரியில் தாளாளர் விகாஷ்சுரானா, லிட்டில் ஜாக்கி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி குழுமத்தின் தலைவர் சாம் தானியேல், சவுத் இன்டியன் பாரா மெடிக்கல் ஆப் இன்ஸ்டிடியூட் முதல்வர் ஆரோன் அற்புதராஜ் ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி இனிப்பு வழங்கினர்.
காட்டாங்கொளத்தூர்
காஞ்சீபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சலீம்கான் தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதே போல கூடுவாஞ்சேரியில் உள்ள வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) தென்னரசு தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி அலுவலகத்தில் தேசிய கொடியை பேரூராட்சி செயல் அலுவலர் முனியாண்டி, ஊரப்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி செயலர் கருணாகரன், மண்ணிவாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி செயலர் ராமபக்தன் தேசிய கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
வண்டலூர் ஊராட்சி அலுவலகத்தில் தேசிய கொடியை ஊராட்சி செயலர் வீரராகவன், நல்லம்பாக்கம், வேங்கடமங்கலம் ஊராட்சியில் ஊராட்சி செயலர் ஹரிகிருஷ்ணன், காரணைப்புதுச்சேரி ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி செயலர் ஜெயச்சந்திரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
கல்பாக்கம்
கல்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டினம் இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா நடந்தது. பள்ளி தாளாளர் டென்னிசன் தலைமை தாங்கினார். முதல்வர் ஜெயா டென்னிசன் வரவேற்றார். கல்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றினார்.
மாங்காடு
சுதந்திர தினத்தை முன்னிட்டு மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த சமபந்தி விருந்தில் மக்களோடு மக்களாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார்.
விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் வான்மதி, தர்மகர்த்தா மணலி சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story