குழந்தை திருமணம் செய்து வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்


குழந்தை திருமணம் செய்து வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
x
தினத்தந்தி 16 Aug 2017 10:30 PM GMT (Updated: 16 Aug 2017 2:43 PM GMT)

குழந்தை திருமணம் செய்து வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே கூறினார்.

வாணாபுரம்,

வாணாபுரம் அருகே உள்ள வரகூரில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கலெகடர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்கினார். மாவட்ட திட்ட இயககுனர் லோகநாயகி முன்னிலை வகித்தார். தாசில்தார் சஜேஸ்பாபு வரவேற்றார்.

கூட்டத்தில் கிராமங்களில் ஊரக வேலைவாய்ப்பு திட்டங்கள் மூலம் நடைபெற்ற பணிகள் குறித்து விவாதிககப்பட்டது.

கூட்டத்தில் கலெகடர் பிரசாந்த் மு.வடநேரே பேசியதாவது:–

திறந்தவெளிப் பகுதியில் மலம் கழிக்கக்கூடாது. அதனால் நோய்கள் ஏற்படும். எனவே அரசு வழங்கும் நிதியை பயன்படுத்தி வீட்டுக்கு ஒரு கழிவறை கட்டிடம் கட்டாயம் கட்டப்படவேண்டும். கிராமங்களை தூய்மையாக வைகக வேண்டுமென்றால் தனிநபரால் முடியாது. அனைவரும் ஒற்றுமையாக இருந்து நம்பகுதியை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.

கடந்த காலஙகளில் மழைநீரை சேமிககாமல் இருந்ததால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து போனது. தற்போது மழை பெய்து வருவதை பயன்படுத்தி தடுப்பணைகள் மூலம் மழைநீரை சேமிகக வேண்டும். இதனால் நிலத்தடி நீர் உயரும்.

திருமண வயதை அடையாத குழந்தைகளுக்கு திருமணம் நடத்தக் கூடாது. அப்படி இப்பகுதியில் குழந்தை திருமணம் நடைபெற்றால் உடனே தகவல் தெரிவிகக வேண்டும். குழந்தை திருமணத்தை செய்து வைக்கும் குழந்தையின் பெற்றோர் மற்றும் திருமண பத்திரிக்கை அச்சிடுபவர்கள் உள்ளிட்டவர்கள் மீது கடும் நடவடிககை எடுககப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல, கண்ணமங்கலம் அருகே உள்ள காளசமுத்திரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மந்தைவெளி மாரியம்மன் கோவில் மைதானத்தில் நடந்தது. மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் மாணிக்கவேலு முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் முன்னாள் துணைத்தலைவர் நடராஜன், முன்னாள் கவுன்சிலர் மோகன், குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் சின்னப்பையன், ரே‌ஷன் கடை விற்பனையாளர் ஜெயசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் தினகரன் நன்றி கூறினார்.

கொளத்தூர் ஊராட்சி திடலில் கிராம சபை கூட்டம் ஆரணி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்தது. கிராம திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. முடிவில் ஊராட்சி செயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.

படவேட்டில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு தனி அலுவலர் திலகவதி தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம் ரே‌ஷன் கடை விற்பனையாளர், மகளிர் குழுவினர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் அண்ணாச்சி நன்றி கூறினார்.

பெரணமல்லூர் அருகே நெடுங்குணம் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (தணிக்கை) குருசாமி தலைமை தாங்கினார். பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சவிதா முன்னிலை வகித்தார். நெடுங்குணம் ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.

இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



Next Story