டி.டி.வி.தினகரன் உருவ பொம்மையை எரித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


டி.டி.வி.தினகரன் உருவ பொம்மையை எரித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Aug 2017 10:45 PM GMT (Updated: 2017-08-27T01:29:22+05:30)

ஆண்டிமடம், தா.பழூரில் டி.டி.வி.தினகரன் உருவ பொம்மையை எரித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வரதராஜன்பேட்டை,

அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. (அம்மா) செயலாளரும், தமிழக அரசின் தலைமை கொறடாவுமான தாமரை.ராஜேந்திரனை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கிய டி.டி.வி.தினகரனை கண்டித்து, அவருடைய உருவபொம்மையை எரித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வரதராஜன்பேட்டை அருகே ஆண்டிமடம் நான்கு ரோட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் சிலம்பூர்.மருதமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ரீடு.செல்வம் முன்னிலை வகித்தார்.

இதில் ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் செந்தில்ராஜன், அன்பில்.கலியமூர்த்தி, அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் நாராயணசாமி மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் தா.பழூரில் ஒன்றிய செயலாளர் வரதராஜன் தலைமையில், டி.டி.வி. தினகரனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தா.பழூர் கடைவீதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பு திரண்ட அ.தி.மு.க. தொண்டர்கள் டி.டி.வி.தினகரனின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் முருகவேல், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர் மைக்கேல், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் வைத்தியநாதன், ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செங்கான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story