முதல்–அமைச்சர் வரவேற்பு பேனர் கிழிப்பு தாம்பரம் நகராட்சி முன்னாள் தலைவர் மீது போலீசில் புகார்


முதல்–அமைச்சர் வரவேற்பு பேனர் கிழிப்பு தாம்பரம் நகராட்சி முன்னாள் தலைவர் மீது போலீசில் புகார்
x
தினத்தந்தி 1 Sept 2017 5:00 AM IST (Updated: 1 Sept 2017 1:55 AM IST)
t-max-icont-min-icon

சென்னையை அடுத்த வண்டலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக சென்ற முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று,

தாம்பரம்,

தாம்பரம் முதல் இரும்புலியூர் சிக்னல் வரை அ.தி.மு.க.வினரால் வைக்கப்பட்டு இருந்த 9 பேனர்கள் கிழித்து சேதப்படுத்தப்பட்டு இருந்தது.

இது குறித்து தாம்பரம் நகர செயலாளர் கூத்தன், தாம்பரம் போலீசில் ஒரு புகார் செய்தார். அதில் அவர், தாம்பரம் நகராட்சி முன்னாள் தலைவரும், டி.டி.வி.தினகரன் ஆதரவாளருமான கரிகாலன் மற்றும், 25–வது வார்டு முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தூண்டுதலின் பேரிலேயே முதல்–அமைச்சர் வரவேற்பு பேனர்கள் கிழிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கூறி இருந்தார்.

அதன்பேரில் தாம்பரம் போலீசார், அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதையடுத்து கரிகாலன், கிருஷ்ணமூர்த்தி இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்று உள்ளனர்.

இது தொடர்பாக கரிகாலன் கூறும்போது, ‘‘அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது போலீசில் பொய் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. பேனரை கிழிக்கும் அளவுக்கு நான் தரம் தாழ்ந்த அரசியல் செய்பவன் அல்ல. 5 ஆண்டு காலம் நகரமன்ற தலைவராக மக்கள் பணிகளை எப்படி கண்ணியமாக செய்தேன் என்பது மக்களுக்கு தெரியும். இது போன்ற பொய் புகார்களால் எங்களை ஒடுக்கி விட முடியாது. மக்கள் அனைத்தையும் பார்த்து கொண்டிருக்கிறார்கள்’’ என்றார்.


Next Story