சுகாதாரத்தை மேம்படுத்த மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேச்சு
தங்களது பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்த மாணவ–மாணவிகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார். பரிசளிப்பு விழா நெல்லை மாவட்டத்தில் சுகாதார வாரம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டன.
நெல்லை,
தங்களது பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்த மாணவ–மாணவிகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
பரிசளிப்பு விழாநெல்லை மாவட்டத்தில் சுகாதார வாரம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டன. தூய்மை திட்ட விழிப்புணர்வை எற்படுத்தும் வகையில் அங்கன்வாடி மையங்களில் சுவர் சித்திரம் வரைதல், ஒரு நிமிட குறும்படம் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கூட்ட அரங்கில் நடந்தது.
விழாவில் கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
ஒரு லட்சம் கழிப்பிடங்கள்இந்தியா முழுவதும் பிரதமரால், தூய்மை பாரத இயக்கம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாவட்டமாக வருகிற அக்டோபர் மாதத்துக்குள் மாற்றிடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தனிநபர் இல்ல கழிப்பிடங்கள் அடுத்த மாதத்துக்குள் கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ– மாணவிகளை வாழ்த்துகிறேன்.
பஞ்சாயத்துக்கு சிறப்புநிதிமேலும் ‘‘கட்டி முடிங்க ஐயித்து காட்டுங்க’’ என்ற போட்டி மூலம் தேர்வு செய்யப்படும் கிராம பஞ்சாயத்துகளுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டப்பணிகளும் செய்து தரப்படும். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை தொழில்நுட்பங்கள் தொடர்பான போட்டிகளும் நடத்தப்படுகிறது. மாணவ–மாணவிகள் அதிக அளவில் பங்கேற்று வருகின்றனர். தனிநபர் இல்ல கழிப்பிடம் கட்டுதல், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையின் மூலம் சிறப்பாக சுகாதாரம் மேம்படும். பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் தங்களது பகுதியை தூய்மையாக வைத்திருக்க விழிப்புணர்வை எற்படுத்த வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
விழாவில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் ஐ£ன் டி பிரிட்டோ, நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜலிங்கம், மகளிர் திட்ட இயக்குனர் ஹெட்சி லீமா மற்றும் அலுவலர்கள், மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.