ஆதனூர் ஊராட்சி தி.மு.க. சார்பில் மாணவி அனிதாவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

ஆதனூர் ஊராட்சி தி.மு.க. சார்பில் மாணவி அனிதாவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
x
தினத்தந்தி 4 Sept 2017 3:00 AM IST (Updated: 4 Sept 2017 2:05 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வால் மருத்துவ படிப்பு கனவு கலைந்ததால் விரக்தி அடைந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வண்டலூர்,

‘நீட்’ தேர்வால் மருத்துவ படிப்பு கனவு கலைந்ததால் விரக்தி அடைந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஆதனூர் ஊராட்சி தி.மு.க சார்பில் கட்சி அலுவலகத்தில் அனிதாவின் திருஉருவ படத்துக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஆதனூர் ஊராட்சி தி.மு.க. செயலாளர் டி.தமிழ்அமுதன் தலைமை தாங்கினார். ஆதனூர்–கரசங்கால் முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும், குன்றத்தூர் ஒன்றிய மகளிரணி செயலாளருமான மலர்விழி தமிழ்அமுதன் முன்னிலை வகித்தார். இதில் ஏராளமான பெண்கள் உள்பட தி.மு.க.வினர் கலந்து கொண்டு மாணவி அனிதா உருவ படத்துக்கு மலர் தூவியும், மெழுவர்த்தி ஏந்தியும் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் நடந்த அமைதி ஊர்வலத்தை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் படப்பை ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் ஆதனூர் ஊராட்சியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் கலந்து கொண்ட பெண்கள் உள்பட அனைவரும் கருப்பு பட்டை அணிந்து இருந்தனர்.

Next Story