செங்கல்பட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் திருமாவளவன் பங்கேற்பு


செங்கல்பட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் திருமாவளவன் பங்கேற்பு
x
தினத்தந்தி 5 Sept 2017 4:15 AM IST (Updated: 5 Sept 2017 12:24 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வால் மருத்துவ படிப்பு கனவு கலைந்ததால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதா சாவுக்கு நீதி கேட்டும், ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும்,

செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த நல்லூர் காலனியில் இரு தரப்பினர் மோதலில் ஒரு பிரிவு மக்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார். இதில் அக்கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

இதேபோல் மாணவி அனிதா தற்கொலை தொடர்பாக மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கும்மிடிப்பூண்டி பஸ் நிலையம் அருகே நேற்று இரவு சி.ஐ.டி.யு. சுமை தூக்கும் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் மாவட்ட தலைவர் விஜயன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

--–

படம் உண்டு

--–

முதல் எடிசன் மட்டும்


Next Story