மாணவி அனிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் -கிருஷ்ணசாமி
மாணவி அனிதா மரணம்குறித்து நீதிவிசாரணை நடத்த வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கிருஷ்ணசாமி மனு அளித்துள்ளார்.
சென்னை
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, அனிதா மரணத்துக்கு நீதி விசாரணைக் கோரி மனு அளித்துள்ளார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாணவி அனிதா மரணம் தற்கொலையா, கொலையா என நீதி விசாரணை நடத்தவேண்டும். மாணவி அனிதா மரணம் போன்று பல்வேறு சம்பவங்கள் தமிழகத்தில் நடந்துள்ளன. அனிதா தற்கொலை செய்துகொள்ள யாரோ தூண்டியிருக்கிறார்கள்.
இந்தப் பெண்ணின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். இது குறித்து முதல்வரிடம் மனு அளித்துள்ளேன். உள்துறை அமைச்சகத்திலும் மனு அளிக்க உள்ளேன்” இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story