மாணவி அனிதா மரணம் ‘நீட்’ தேர்வுக்கு சாவு மணி அடித்துள்ளது ஜி.கே.மணி பேட்டி
மாணவி அனிதா மரணம் ‘நீட்’ தேர்வுக்கு சாவு மணி அடித்துள்ளது என பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி நேற்று நாமக்கல்லில் கூறினார்.
நாமக்கல்,
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ‘நீட்’ தேர்வு காரணமாக மருத்துவ படிப்பில் சேரமுடியாத வேதனையில் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணம் ‘நீட்’ தேர்வுக்கு சாவுமணி அடித்துள்ளது. ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்கவேண்டும் என்பதே பா.ம.க.வின் நிலைப்பாடு. மாணவி அனிதா மரணத்தில் நீதிவிசாரணை நடத்தவேண்டிய அவசியம் இல்லை.
ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலர் முதல்-அமைச்சர் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக கவர்னரிடம் கடிதம் அளித்துள்ள நிலையில், கவர்னர் தனது பொறுப்பை தட்டிக்கழிக்க கூடாது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை முழுமையாக கவனத்தில் கொள்ளாமல், தமிழகத்தில் மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க அரசு முயற்சி செய்வது கண்டனத்துக்கு உரியது. இந்த முயற்சியை அரசு கைவிடவேண்டும். வருகிற அக்டோபர் மாதம் 2-ந் தேதி முதல் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி உள்ளாட்சி தேர்தலை காலதாமதம் இல்லாமல் நடத்தவேண்டும். மேட்டூர் அணை நிரம்பும் காலத்தில் வீணாகும் தண்ணீரை நாமக்கல், சேலம் மாவட்ட ஏரிகளில் நிரப்ப உரிய திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் ஜி.கே.மணி கலந்துகொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர்கள் பொன்.ரமேஷ், பொன்னுசாமி, மாவட்ட அமைப்பு செயலாளர் மோகன்ராஜ், மாவட்ட செயலாளர்கள் சுதாகர், சரவணராஜ், சட்ட ஆலோசகர் நல்வினை விஸ்வராஜ், இளைஞர் அணி மாவட்ட தலைவர் பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story