3 பஸ்கள் மோதி விபத்து மாணவர்கள் உள்பட 5 பேர் காயம்


3 பஸ்கள் மோதி விபத்து மாணவர்கள் உள்பட 5 பேர் காயம்
x
தினத்தந்தி 6 Sept 2017 4:15 AM IST (Updated: 6 Sept 2017 3:13 AM IST)
t-max-icont-min-icon

3 பஸ்கள் மோதி விபத்து மாணவர்கள் உள்பட 5 பேர் காயம்

அடுக்கம்பாறை,

வேலூரை அடுத்த அரியூரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் அடுக்கம்பாறை பகுதி மாணவர்களை வீட்டில் இருந்து அழைத்து வருவதற்காக பள்ளி பஸ் நேற்று காலை புறப்பட்டு சென்றது. அடுக்கம்பாறை அருகே நெல்வாய் பஸ் நிறுத்தத்தில் பள்ளி பஸ் நின்று மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டிருந்தது. பள்ளி பஸ் முன்பு அரசு டவுன் பஸ் ஒன்று நின்று பயணிகளை ஏற்றி கொண்டிருந்தது.

அதே நேரத்தில், ஆரணியில் இருந்து வேலூர் நோக்கி வந்த தனியார் பஸ், அங்கு நின்றிருந்த பள்ளி பஸ் மீது மோதியது. பள்ளி பஸ், அதற்கு முன்பு நின்றிருந்த அரசு பஸ் மீது மோதி சேதமடைந்தது. இந்த விபத்தில் பள்ளி பஸ்சில் இருந்த 3 மாணவர்கள், ஒரு ஆசிரியை உள்பட 5 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Tags :
Next Story