நீட் தேர்வை ரத்து செய்ய கோரிக்கை: பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் போராட்டம்
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளின் போராட்டத்தால் நெல்லையில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை,
மாணவி அனிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோன்று பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளும் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி, ஜான்ஸ் கல்லூரி மாணவ- மாணவிகள் நேற்று காலையில் கல்லூரிக்கு வந்தனர். சிறிது நேரத்தில் வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி வளாகத்தில் ஒன்று கூடினர். அங்கு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த மாணவி அனிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மாணவி அனிதா சாவுக்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி கோஷங்களை எழுப்பினர்.
பாளையங்கோட்டை சேவியர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நேற்று காலையில் வகுப்பைகளை புறக்கணித்து விட்டு பள்ளிக்கூட வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள், மாணவி அனிதா மரணத்துக்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சேவியர் பள்ளிக்கூடம் முன்பும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரிக்கு நேற்று வழக்கம் போல் மாணவ- மாணவிகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது கல்லூரி முன்பு, செய்துங்கநல்லூர் தனியார் பாலிடெக்னிக் மாணவர்கள் நின்று கொண்டு, நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தனர். அதற்கு சதக்கத்துல்லா அப்பா கல்லூரி மாணவர்கள் ஒருசிலர் ஆதரவு தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று பாலிடெக்னிக் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு அந்த மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
நெல்லை பேட்டை ம.தி.தா. இந்து கல்லூரி மாணவர்கள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் திருமலை நம்பி தலைமையில் மாணவ- மாணவிகள் சுமார் 2 ஆயிரம் பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, மாணவி அனிதா மரணத்துக்கு நீதி விசாரணை நடத்த வேண்டும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
நெல்லையில் நடந்த மாணவர்கள் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story