சுகாதார சீர்கேட்டை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
தோவாளை அருகே சுகாதார சீர்கேட்டை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழியை அடுத்த தோவாளை ஊராட்சிக்கு உள்பட்ட பண்டாரபுரத்தில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஊரின் நுழைவுவாயில் அருகே ஒரு கோவில் முன் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது.
மேலும், கொசு உற்பத்தி அதிகமாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, போதிய வடிகால் வசதி ஏற்படுத்தி சாக்கடை நீரை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்தநிலையில், நேற்று காலை அந்த பகுதி பொதுமக்கள் சாக்கடை நீர் தேங்கி நின்ற இடத்தில் கூடினர். தொடர்ந்து, சாக்கடைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story