பெயர் மற்றும் முகவரி இல்லாமல் சுவரொட்டிகள் அச்சடித்த அச்சக உரிமையாளர் கைது
சென்னை அம்பத்தூர், பாடி ஆகிய பகுதிகளில் ‘ஏ.ஐ.சி.சி.டி.யூ., மலேரியா ஒழிப்பு தொழிலாளர்கள் கோட்டை ஒழிப்பு பேரணி’ என்ற பெயரில்
அம்பத்தூர்,
தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு எதிராக சில வாசங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. மேலும், அதே சுவரொட்டிகள் அம்பத்தூர் மண்டல அலுவலகத்திலும் ஒட்டப்பட்டிருந்தது. ஆனால் அதில், எங்கு அச்சடிக்கப்பட்டது என்பது குறிப்பிடவில்லை. இதுகுறித்து விசாரிக்க அம்பத்தூர் உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில் கொரட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்தநிலையில், பாடி வடக்கு மாட வீதியில் உள்ள ஒரு அச்சகத்தில் அந்த சுவரொட்டி அச்சடிக்கப்பட்டதை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அங்கு சென்று அச்சகத்தின் உரிமையாளர் விஸ்வநாதன் (வயது 40) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த 10 ஆண்டுகளாக அவர் இதேபோல், அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரி இல்லாமல் சுவரொட்டிகளை அச்சடித்து வினியோகித்து வந்தது தெரியவந்தது.