திருத்துறைப்பூண்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்கு
திருத்துறைப்பூண்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்துறைப்பூண்டி,
திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட ரொக்ககுத்தகை பகுதியில் தட்டுப்பாட்டின்றி குடிநீர் வழங்ககோரியும், நகராட்சியை கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் திருத்துறைப்பூண்டி-வேதாரண்யம் சாலையில் ரொக்ககுத்தகையில் நேற்றுமுன்தினம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்குப்பதிவு
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் ஆகியோர் உடனடியாக டேங்கர் லாரி மூலம் குடிநீர் வழங்கப்படும் என்று தெரிவித்தனர். இதனால் சாலை மறியல் கைவிடப் பட்டது. இந்த நிலையில் அனுமதியின்றி சாலை மறியல் ஈடுபட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் செல்வன் உள்பட 10 பேர் மீது திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story