நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மறியலில் ஈடுபட்ட 29 பேர் கைது
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், சென்னை மெரினாவில் ஜெயலலிதா சமாதியில் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்யப்பட்டதை கண்டித்தும், புதுக்கோட்டையில் இந்திய மாணவர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை,
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், சென்னை மெரினாவில் ஜெயலலிதா சமாதியில் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்யப்பட்டதை கண்டித்தும், புதுக்கோட்டையில் இந்திய மாணவர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சாலைமறியலில் ஈடுபட்ட 29 பேரை கைது செய்து ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரையும் விடுவித்தனர்.
இதேபோல கந்தர்வகோட்டை அருகே உள்ள புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நமணசமுத்திரம் கடைவீதியிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
Related Tags :
Next Story