பலத்த காற்றுடன் மழை; வாழைகள் முறிந்து விழுந்தன
கரூர் அருகே பலத்த காற்றுடன் மழை பெய்ததால் வாழைகள் முறிந்து விழுந்தன.
கரூர்,
கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் மழை பெய்தது. அப்போது பலத்த காற்றும் வீசியது. இந்த நிலையில் கரூர் அருகே நெரூர் வடபாகம் பகுதியில் விவசாயி பெரியசாமி என்பவரது வாழைத்தோட்டத்தில் வாழைகள் முறிந்து விழுந்தன.
தார்கள், விளைச்சலுக்கு வந்து வெட்ட வேண்டிய நேரத்தில் வாழைகள் பலத்த காற்றால் முறிந்து விழுந்தன. வாழைகள் காற்றில் முறிந்து விழாமல் இருக்க சவுக்கு கம்புகள் வைக்கப்பட்டிருந்தும் வீணானது. இதேபோல அந்த பகுதியில் சிலரது வாழைகளும் காற்றில் முறிந்து விழுந்தன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
மழை அளவு
மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நேர நிலவரப்படி பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:– கரூர்–9.20 (மி.மீ.),அரவக்குறிச்சி–.4, அணைப்பாளையம்–4, க.பரமத்தி–18, தோகைமலை–10, கிருஷ்ணராயபுரம்–2, மாயனூர்–2, பஞ்சப்பட்டி–7.2, பாலவிடுதி–32, மயிலம்பட்டி–21.