கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் மனு


கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 6 Sep 2017 10:15 PM GMT (Updated: 6 Sep 2017 9:49 PM GMT)

சவுதி அரேபியாவில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் பெரம்பலூர் கலெக்டரிடம் மனைவி மனு

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன் கந்தசாமி (வயது 47). இவருக்கு போதும்பெண் (40) என்ற மனைவியும், விஜய் (20), வெற்றிவேல் (18) என்ற மகன் களும் உள்ளனர். இந்நிலையில் கந்தசாமி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவில் உள்ள ஒரு கம்பெனியில் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் போதும்பெண் செல்போன் எண்ணுக்கு வெளிநாட்டிலிருந்து போன் வந்தது. அப்போது போனில் பேசியவர், கந்தசாமி மாரடைப்பால் இறந்துவிட்டார் என கூறியுள்ளார். இதனால் போதும்பெண் மற்றும் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி, கதறி அழுதனர். மேலும் செய்வதறியாமல் திகைத்தனர். இதனை தொடர்ந்து நேற்று போதும்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தாவை நேரில் சந்தித்து சவுதி அரேபியாவில் இறந்த கந்தசாமியின் உடலை சொந்த ஊர் கொண்டுவர நட வடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், இந்திய தூதரகத்தின் மூலம் சவுதி அரேபியாவில் இறந்த கந்தசாமியின் உடலை விரைவில் இந்தியா கொண்டுவர நட வடிக்கை எடுக்கப்படும் என கூறினார். 

Next Story