பட்டுக்கோட்டையில் டி.வி. மெக்கானிக் கடையில் திருட்டு 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

பட்டுக்கோட்டையில் டி.வி. மெக்கானிக் கடையில் திருட்டு 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 6 Sep 2017 10:15 PM GMT (Updated: 6 Sep 2017 9:49 PM GMT)

பட்டுக்கோட்டையில் டி.வி. மெக்கானிக் கடையில் திருட்டு 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சாமியார் மடம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது37). இவர் அதே பகுதியில் டி.வி. மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று கார்த்திக் தனது கடைக்கு அருகே உள்ள டீக்கடைக்கு சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட 3 பேர் கடைக்குள் புகுந்து டி.வி. பழுது பார்ப்பதற்கு பயன்படுத்தப்படும் கருவிகளை திருடினர். பின்னர் தப்பி ஓட முயன்ற அவர்களை, அக்கம்பக்கத்தினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்டவர்களில் ஒருவர் ஒரத்தநாடு தெற்குக்கோட்டையை சேர்ந்த சிங்கமுத்து மகன் பாலமுருகன் (21) என்பதும் மற்ற 2 பேரும் 17 வயது சிறுவர்கள் என்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பட்டுக்கோட்டை போலீசார் 2 சிறுவர்கள் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். 

Related Tags :
Next Story