இலங்கை அகதி முகாமை சேர்ந்தவர் கைது


இலங்கை அகதி முகாமை சேர்ந்தவர் கைது
x
தினத்தந்தி 7 Sept 2017 3:40 AM IST (Updated: 7 Sept 2017 3:40 AM IST)
t-max-icont-min-icon

மதுபானம் விற்றதாக இலங்கை அகதி முகாமை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

ஆரணி,

ஆரணி பழைய பஸ் நிலையம் அருகில், டாஸ்மாக் கடையில் இருந்து மதுபானங்களை வாங்கி வந்து, ஒரு அதனை கைப்பைகளில் வைத்து விற்பனை செய்வதாக ஆரணி டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பழைய பஸ் நிலையம் அருகில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர், இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த சந்திரன் (வயது 38) என்பது தெரிய வந்தது. அவர், டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபானங்களை வாங்கி வந்து வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்ததாக கூறினார். இதையடுத்து சந்திரன் கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 20 மதுபான பாட்டில்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story