தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் கைது


தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் கைது
x
தினத்தந்தி 8 Sept 2017 2:46 AM IST (Updated: 8 Sept 2017 2:46 AM IST)
t-max-icont-min-icon

உணவக உரிமையாளரிடம் ரூ.2½ லட்சம் பறித்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மும்பை ஒஷிவாராவில் விலாஸ் சவேரி என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் ஆச்சார்ய ராம்கிருஷ்ணன்(வயது60) என்பவர் சம்பவத்தன்று சந்தித்து பேசினார். அப்போது உங்களது உணவகம் மாநகராட்சி விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்து உள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்து, நடவடிக்கை எடுக்காமல் இருக்க தனக்கு ரூ.5 லட்சம் தரவேண்டும் என்று மிரட்டல் விடுத்தார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த விலாஸ் சவேரி இது குறித்து ஒஷிவாரா போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் கொடுத்த யோசனையின்படி அவர் சம்பவத்தன்று ஆச்சார்ய ராமகிருஷ்ணனை செல்போனில் தொடர்பு கொண்டு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் தருவதாக கூறினார். இதை நம்பிய ஆச்சார்ய ராமகிருஷ்ணன் உணவகத்திற்கு வந்து பணத்தை வாங்கினார்.

அப்போது அங்கு மறைந்து இருந்து கண்காணித்த போலீசார் ஆச்சார்ய ராம்கிருஷ்ணனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.



Next Story