பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் சாலை மறியல்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 இடங்களில் ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் ஈடுபட்ட 1,944 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பில் கிருஷ்ணகிரி, பர்கூர், காவேரிப்பட்டணம், வேப்பனப்பள்ளி ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது, சி.பி.எஸ். ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும்.
ஊதிய முரண்பாடுகளை களைந்து 8-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்திட வேண்டும். சிறப்பு காலமுறை, தொகுப்பு, மதிப்பூதியங்களை ஒழித்து, வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
600 பேர் கைது
இதில், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில தலைவர் தியோடர்ராபின்சன், பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் நாராயணன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன், வட்ட தலைவர் வெங்கடேசன், ஒன்றிய நிர்வாகிகள் திருவேங்கடம், ரகு, சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தை தொடர்ந்து, கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 325-க்கும் மேற்பட்ட ஆசிரியைகள் மற்றும் பெண் அரசு ஊழியர்கள் உள்பட 600 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதை முன்னிட்டு கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் கணேஷ்குமார் (கிருஷ்ணகிரி டவுன்), ஞானசேகரன் (தாலுகா) மற்றும் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
போச்சம்பள்ளி
போச்சம்பள்ளியில் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் வட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். ஆசிரியர் சங்க முன்னேற்ற சங்க நிர்வாகி சண்முகம், பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகி சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நிர்வாகிகள் அப்துல்அலி, சங்கர், இளங்கோவன், சேரன், சகாதேவன், கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 129 ஆசிரியைகள், 156 ஆசிரியர்கள் என மொத்தம் 285 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரி, ஓசூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, சூளகிரி, தேன்கனிக்கோட்டை ஆகிய 6 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் ஈடுபட்டதாக 1048 பெண்கள், 896 ஆண்கள் என மொத்தம் 1,944 பேரை போலீசார் கைது செய்தனர். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

Related Tags :
Next Story