நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கும்பகோணத்தில் கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலைமறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணம்,
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கிடைக்க கோரியும் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த 4-ந்தேதி அரசு ஆண்கள் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி நேற்று அரசு ஆண்கள் கலை கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. இந்தநிலையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நேற்றுமுன்தினம் முதல் அரசினர் பெண்கள் கலை கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 2-வது நாளாக மாணவிகள் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதேபோல் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கும்பகோணம் பஸ் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் தமிழினியன் தலைமை தாங்கினார்.
இதில் மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் அருளரசன், ஒன்றிய செயலாளர் ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் பட்டுக்கோட்டை ஆலடிக்குமுளை கிராமம் சாலை சந்திப்பில் விக்னேஷ் தலைமையில் 250 மாணவர்கள், 50 மாணவிகள் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், மாணவி அனிதா தற்கொலைக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Related Tags :
Next Story