நீட்தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து சாலைமறியல்


நீட்தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து சாலைமறியல்
x
தினத்தந்தி 8 Sept 2017 4:30 AM IST (Updated: 8 Sept 2017 2:50 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி திருவாரூர் அருகே அம்மையப்பன் அரசு பள்ளி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தை சேர்ந்த மாணவி அனிதாவிற்கு நீட் தேர்வினால் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த அனிதா கடந்த 1-ந்தேதி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் உயிரிழப்பிற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என குற்றஞ்சாட்டி தமிழகம் முழுவதும் மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்். இதன் தொடர்ச்சியாக அனிதா உயிரிழப்பிற்கு கண்டனம் தெரிவித்து திருவாரூர் அருகே உள்ள அம்மையப்பன் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நேற்று வகுப்பை புறக்கணித்து தஞ்சை-திருவாரூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். உயிரிழந்த மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கொரடாச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Related Tags :
Next Story