விக்கிரமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி தந்தை-மகன் பலி


விக்கிரமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி தந்தை-மகன் பலி
x
தினத்தந்தி 8 Sept 2017 4:30 AM IST (Updated: 8 Sept 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரமங்கலம் அருகே வயலுக்கு வேலியாக போடப்பட்டிருந்த மின்கம்பியை மிதித்த தந்தையும், மகனும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தனர்.

விக்கிரமங்கலம்,

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள சாத்தம்பாடி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் வேலா யுதம் (வயது 95). விவசாயி. இவருடைய மகன் தங்க ராசு(63). இவர், கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் சாத்தம்பாடியில் கொள்ளிடம் ஆற்்றுப்படுகை பகுதியில் உள்ள தன்னுடைய விவசாய நிலத்தில் கத்தரி செடி பயிரிட்டுள்ளார்.

அதே ஊரை சேர்ந்தவர் தேவேந்திரன்(52). இவருடைய நிலம், தங்கராசுவின் விவசாய நிலத்தின் அருகே உள்ளது. தேவேந்திரன் தன்னுடைய நிலத்தில் முத்துசோளம் பயிரிட்டுள்ளார். சோளத்தை காட்டுப்பன்றி சேதப்படுத்து வதை தடுக்க, அவர் தங்கராசு நிலத்தின் வழியாக மின்சார வேலி அமைத்திருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று அதிகாலை வழக்கம்போல் ஆடு, மாடுகளுக்கு புல் அறுப்பதற்காக வேலாயுதமும், தங்கராசுவும் தங்களுடைய விவசாய நிலத்திற்கு சென்ற னர். அப்போது தேவேந்திரன் வயலுக்கு வேலியாக போடப் பட்டிருந்த மின்கம்பியை எதிர்பாராதவிதமாக அவர்கள் மிதித்தனர். இதில் மின்சாரம் தாக்கி 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த விக்கிரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் அங்கு வந்து, வேலாயுதம், தங்கராசு வின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி தந்தை - மகன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. 

Related Tags :
Next Story