ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக ஓய்வூதியர்கள் சாலை மறியல்


ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக ஓய்வூதியர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 Sept 2017 4:00 AM IST (Updated: 8 Sept 2017 3:00 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக ஓய்வூதியர்கள் சாலை மறியல்

நாகர்கோவில்,

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான ஜாக்டோ–ஜியோ அமைப்பு சார்பில் குமரி மாவட்டத்தில் நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இதையொட்டி ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் 3 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், போராட்டத்துக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பிலும் சாலை மறியல் போராட்டம் நடந்தது. நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன் நடந்த இந்த மறியல் போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் அல்போன்ஸ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி.பெல்லார்மின் உள்பட பலர் கலந்துகொண்டனர். மறியலில் ஈடுபட்ட 33 பேரை போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story