மும்பையில் 257 பேர் பலியான தொடர் குண்டு வெடிப்பு வழக்கு 2 பேருக்கு தூக்கு தண்டனை
257 பேர் பலியான மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 2 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தடா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
257 பேர் பலியான மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 2 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தடா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. மேலும் தாதா அபுசலீம் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனையும், மற்றொருவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்தது.
மும்பை,
மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு மார்ச் 12-ந் தேதி நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கியது.
மும்பை பங்கு சந்தை, காத்தா பஜார், லக்கி பெட்ரோல் பங்க், ஜவேரி பஜார் உள்பட 12 இடங்களில் மதியம் 1.30 மணி முதல் பிற்பகல் 3.40 மணி வரை 2 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன.
இந்த பயங்கர தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் அப்பாவி மக்கள் 257 பேர் கொல்லப்பட்டனர். 713 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் மும்பை நகரமே ரத்தக்களறியானது. ஒட்டுமொத்த நாடே அதிர்ந்தது. குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காரணமான நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் 100 பேரை குற்றவாளிகள் என்று மும்பை தடா கோர்ட்டு கடந்த 2007-ம் ஆண்டு அறிவித்தது. இவர்களில் 12 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் தங்களுக்கு எதிரான தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர்.
இதில் குற்றவாளி யாகூப் மேமனுக்கு மட்டும் தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. அவருக்கு 2015-ம் ஆண்டு ஜூலை 30-ந் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.
இந்த நிலையில், குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை இறுதிகட்டத்தை எட்டிய போது, குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட முஸ்தபா டோசா, நிழல் உலக தாதா அபுசலீம் (வயது48), கரிமுல்லாகான் (55), பெரோஷ் கான் (47), ரியாஸ் சித்திக் (67), தாகிர் மெர்ச்சண்ட் (55), அப்துல் கயூம் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
எனவே, அவர்கள் மீது தடா கோர்ட்டில் தனியாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த விசாரணை கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்தது. இவர்கள் மீதான தீர்ப்பை கடந்த ஜூன் மாதம் 16-ந் தேதி தடா கோர்ட்டு அறிவித்தது.
அப்போது தாதா அபுசலீம், முஸ்தபா டோசா, கரிமுல்லாகான், பெரோஷ் கான், ரியாஸ் சித்திக், தாகிர் மெர்ச்சண்ட் ஆகிய 6 பேரை குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். இவர்களில் ரியாஸ் சித்திக்கை தவிர மற்ற 5 பேரும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தேசத்துக்கு எதிராக போர் புரிதல், குற்றச்சதி, கொலை பிரிவுகளின் கீழ் மட்டுமின்றி தடா சட்டம், வெடிபொருட்கள் சட்டம், ஆயுதங்கள் சட்டம் மற்றும் பொதுசொத்துகளை அழித்தல் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர். அப்துல் கயூமுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் நிரூபிக்கப்படாததால் அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 6 பேருக்குமான தண்டனை மீதான வாதம் நடந்து வந்தது. அப்போது முஸ்தபா டோசா, பெரோஸ்கான், கரிமுல்லாகான், தாகிர் மெர்ச்சண்ட் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
தாதா அபுசலீம் போர்ச்சுக்கல் நாட்டில் இருந்து நாடுகடத்தப்பட்டவர் என்றும், நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் பேரில் அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கவோ அல்லது 25 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கவோ முடியாது என்று அவரது தரப்பு வக்கீல் வாதிட்டார்.
தண்டனை மீதான வாதம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் கடந்த ஜூன் மாதம் 28-ந் தேதி குற்றவாளி முஸ்தபா டோசா திடீரென மரணம் அடைந்தார். இந்த நிலையில், தண்டனை மீது நடந்த விவாதம் அண்மையில் முடிந்தது.
இதை தொடர்ந்து குற்றவாளிகள் மீதான தண்டனை விவரத்தை அறிவிக்க நேற்று தடா கோர்ட்டு கூடியது. கோர்ட்டு வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. குற்றவாளிகள் 5 பேரும் காலை 11.15 மணிக்கு தடா கோர்ட்டுக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.
இதை தொடர்ந்து நீதிபதி அவர்களுக்கான தண்டனை விவரங்களை அறிவித்தார். அப்போது குற்றவாளிகள் தாகிர் மெர்ச்சண்ட் மற்றும் பெரோஸ்கான் ஆகியோருக்கு நீதிபதி தூக்கு தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறினார்.
தாதா அபுசலீம் மற்றும் கரிமுல்லாகான் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
குற்றவாளி ரியாஸ்சித்திக்கிற்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து 24 ஆண்டுகளுக்கு பிறகு இவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story