கே.ஜி.போப்பையா எம்.எல்.ஏ. உள்பட 50 பேர் கைது


கே.ஜி.போப்பையா எம்.எல்.ஏ. உள்பட 50 பேர் கைது
x
தினத்தந்தி 8 Sept 2017 4:55 AM IST (Updated: 8 Sept 2017 4:55 AM IST)
t-max-icont-min-icon

மடிகேரியில் இருந்து மங்களூருவுக்கு மோட்டார் சைக்கிளில் பேரணியாக செல்ல முயன்ற கே.ஜி.போப்பையா எம்.எல்.ஏ. உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

குடகு,

ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் கொலை செய்யப்படுவதை கண்டித்தும், அந்த கொலை வழக்குகளில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், ஏற்கனவே கைதானவர்கள் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைப்பை தடை செய்ய கோரியும் கர்நாடக பா.ஜனதா இளைஞர் அணி சார்பில் மங்களூருவுக்கு ‘மங்களூரு சலோ‘ என்ற பெயரில் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி வழங்க மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில் போலீசாரின் தடையை மீறி கர்நாடகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது. அதேபோல குடகு மாவட்டம் மடிகேரியில் இருந்தும் கே.ஜி.போப்பையா எம்.எல்.ஏ. தலைமையில் பா.ஜனதாவினர் மோட்டார் சைக்கிளில் பேரணியாக செல்ல முயன்றனர்.

இதுபற்றி அறிந்த மடிகேரி போலீசார், இந்த மோட்டார் சைக்கிள் பேரணியை தடுத்து நிறுத்தினர். மேலும், பேரணிக்கு அனுமதி கிடையாது என்றும், இதனால் உடனடியாக கலைந்து செல்லும்படியும் பா.ஜனதாவினரிடம் போலீசார் கூறினர். ஆனால், பா.ஜனதாவினர் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்துவிட்டனர். இதனால், போலீசார் கே.ஜி.போப்பையா எம்.எல்.ஏ. உள்பட பா.ஜனதாவினர் 50 பேரை கைது செய்து வேனில் ஏற்றி அங்கிருந்து அழைத்து சென்றனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதனால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story