காட்பாடியில் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் சாலை மறியல்
ஆசிரியர், அரசு ஊழியர் இயக்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி நேற்று தமிழகம் முழுவதும் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காட்பாடி,
ஆசிரியர், அரசு ஊழியர் இயக்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி நேற்று தமிழகம் முழுவதும் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் காட்பாடி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைமை குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன், மாவட்ட தலைமை குழு உறுப்பினர்கள் சுரேஷ்குமார், செல்வகுமார், பாபு, ஆறுமுகம், ஆண்டாள் ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் திடீரென காட்பாடி, குடியாத்தம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட 500–க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து, காட்பாடி ரெயில்வே திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.