தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Sep 2017 9:00 PM GMT (Updated: 9 Sep 2017 1:33 PM GMT)

தூத்துக்குடி மாநகராட்சி 17–வது வார்டுக்கு உட்பட்ட கோவில்பிள்ளைவிளை, அய்யர்விளை, பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாநகராட்சி சார்பில் லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகராட்சி 17–வது வார்டுக்கு உட்பட்ட கோவில்பிள்ளைவிளை, அய்யர்விளை, பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாநகராட்சி சார்பில் லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கடந்த 2 மாதங்களாக அந்த பகுதிகளில் லாரி தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோவில்பிள்ளைவிளையில் நேற்று காலை காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 17–வது வார்டு கிளை செயலாளர் கிருஷ்ணம்மாள் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர்கள் ராஜா, கண்ணன், ஒன்றிய செயலாளர் சங்கரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், வாரம் ஒருமுறை லாரி தண்ணீர் வழங்க வேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த தாளமுத்துநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால், அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story