நெல்லையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 1,347 வழக்குகளுக்கு தீர்வு


நெல்லையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 1,347 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 9 Sep 2017 9:15 PM GMT (Updated: 9 Sep 2017 2:52 PM GMT)

நெல்லையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 1,347 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.

நெல்லை,

நெல்லையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 1,347 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.

மக்கள் நீதிமன்றம்

நெல்லை கோர்ட்டில் இந்த ஆண்டுக்கான 4–வது மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகரன் தொடங்கி வைத்தார். நெல்லை கோர்ட்டில் உள்ள வழக்குகளுக்கு 9 அமர்வு அமைக்கப்பட்டு இருந்தன.

முதலாவது அமர்வு நீதிபதிகள் கருப்பையா, கெங்காராஜ் ஆகியோர் தலைமையிலும், 2–வது அமர்வு நீதிபதிகள் அப்துல்காதர், ஹமானந்தகுமார் ஆகியோர் தலைமையிலும், 3–வது அமர்வு நீதிபதிகள் ஜெயராஜ், தனஞ்செயன் ஆகியோர் தலைமையிலும், 4–வது அமர்வு நீதிபதிகள் தாகூர், அகிலா தேவி, விஜயலட்சுமி ஆகியோர் தலைமையிலும், 5–வது அமர்வு மக்கள் நீதிமன்ற நீதிபதிகள் ராஜசேகர், பாண்டியராஜன் தலைமையிலும், 6–வது அமர்வு நீதிபதி ராமதாஸ் தலைமையிலும், 7–வது அமர்வு நீதிபதி கார்த்திகேயன் தலைமையிலும், 8–வது அமர்வு நீதிபதி மாலதி தலைமையிலும், 9–வது அமர்வு நீதிபதி பிஸ்மிதா தலைமையிலும் அமைக்கப்பட்டு இருந்தது.

இது தவிர தென்காசி, அம்பை, சங்கரன்கோவில் வள்ளியூர், செங்கோட்டை, நாங்குநேரி, சேரன்மாதேவி, சிவகிரி, ஆலங்குளம் ஆகிய ஊர்களுக்கு தனியாக 9 அமர்வுகளும் அமைக்கப்பட்டு இருந்தன. மொத்தம் 2 ஆயிரத்து 515 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 1,173 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. ரூ.5 கோடியே 90 லட்சத்து 43 ஆயிரத்து 632 இழப்பீடாக வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். கோர்ட்டில் இல்லாத வழக்குகள் 2 ஆயிரத்து 294 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டன. இதில் 174 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.

1,347 வழக்குகளுக்கு தீர்வு

நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 1,347 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை நெல்லை சட்டப்பணிகள் ஆணைய குழு செயலாளர் நீதிபதி ராமலிங்கம் செய்து இருந்தார்.


Next Story