தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Sep 2017 10:45 PM GMT (Updated: 9 Sep 2017 7:38 PM GMT)

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் காட்டுமன்னார்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காட்டுமன்னார்கோவில்,

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் காட்டுமன்னார்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மியான்மர் நாட்டில் முஸ்லிம்கள் தாக்கப்படுவதை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அஸ்லம் தலைமை தாங்கினார்.

 மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் முகமதுநுகுமான் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில பேச்சாளர் முகமதுரபீக் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் நிர்வாகிகள் முகமதுஅய்யூப், முகமது இபுராகிம், ஜூனைது, பாஷா, பதுருதீன், சாதிக்பாஷா, நூருல் அலீம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story