வேடசந்தூரில் இந்திய தேசிய லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


வேடசந்தூரில் இந்திய தேசிய லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Sep 2017 10:45 PM GMT (Updated: 2017-09-10T01:08:29+05:30)

வேடசந்தூரில் இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வேடசந்தூர்,

மியான்மரில் முஸ்லீம்கள் கொல்லப்படுவதை கண்டித்தும், 10 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராடி தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பில் வேடசந்தூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வேடசந்தூர் நகர பொருளாளர் மதுபிரவின் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ‌ஷர்புதின், நகர துணைச்செயலாளர் அரபுபாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் வதிலைநசீர், மாவட்ட செயலாளர் அபுதாலீப்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள்.


Next Story