இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Sep 2017 10:45 PM GMT (Updated: 9 Sep 2017 7:38 PM GMT)

சாணார்பட்டி ஒன்றியம் கோபால்பட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோபால்பட்டி,

சாணார்பட்டி ஒன்றியம் கோபால்பட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய தலைவர் பெரியசாமி, ஒன்றிய செயலாளர் ராமசாமி, மாதர் சங்க தலைவர் தீபா மற்றும் நிர்வாகி வெள்ளைக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்யக்கோரி முழக்கமிட்டனர். மேலும், மாணவி அனிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story
  • chat