‘நீட்’ தேர்வை வைத்து தி.மு.க. அரசியல் நடத்துகிறது பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
‘நீட்’ தேர்வை வைத்து தி.மு.க. அரசியல் நடத்துகிறது என்று பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
செம்பட்டு,
திருச்சியில் தி.மு.க. தோழமை கட்சிகள் நடத்திய கண்டன பொதுக்கூட்டத்துக்கு போலீசார் தடை விதித்ததின் பின்னணியில் பா.ஜ.க. இல்லை. நீட் தேர்வுக்கு எதிராக எந்தவித போராட்டமும் நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் காவல்துறை அந்த நடவடிக்கையை எடுத்தது.
பா.ஜ.க.வை பொறுத்தவரை நேரடி அரசியலில் தான் இறங்கி உள்ளோம். நாங்கள் பின்வாசல் வழியாக ஆட்சி நடத்த வேண்டிய அவசியம் இல்லை. தி.மு.க. தான் சந்தர்ப்பவாத அரசியலை நடத்திக்கொண்டு இருக்கிறது.
தி.மு.க. கூட்டணியில் இருந்தால் அமைச்சர் பதவி தர மாட்டார்கள் என கூறி, மக்கள் நல கூட்டணியில் அங்கம் வகித்த தொல்.திருமாவளவன் இப்போது மீண்டும் தி.மு.க. மேடைக்கு வந்து உள்ளார். ஒவ்வொரு தேர்தலின்போதும் கோபாலபுரம், போயஸ்கார்டன் என மாறி, மாறி போய் வந்த கம்யூனிஸ்டு தலைவர்களும் இப்போது அந்த கூட்டணியில் இருக்கிறார்கள். எனவே தி.மு.க. தான் சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறது.
அ.தி.மு.க. அரசுக்கு பெரும்பான்மை இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது அவரது நம்பிக்கை. அதுபற்றி நான் ஒன்றும் கூற முடியாது. காஞ்சீபுரத்தில் பேட்டியளித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என கூறி இருப்பதற்கு இப்போது நான் எதுவும் சொல்ல முடியாது. பொதுவாக தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்துவது வழக்கம்.
நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு தெளிவாக இருக்கிறது. தற்போது தமிழக அரசும் தெளிவான முடிவுக்கு வந்து விட்டது. நீட் தேர்வுக்காக தமிழகம் முழுவதும் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. நீட் தேர்வு பிரச்சினையில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் எந்த குழப்பத்தையும் ஏற்படுத்தவில்லை. தமிழகத்தில் உள்ள தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தான் இதனை அரசியலாக்கி வருகிறார்கள். நீட் தேர்வை வைத்து தமிழகத்தில் அரசியல் நடக்கிறது.
நான் படித்த காலத்தில் நீட் தேர்வு கிடையாது. நானும் எனது குடும்பத்தில் உள்ளவர்களும் நான்கைந்து ஆண்டுகள் படித்து கடுமையாக உழைத்து தான் டாக்டர் தேர்வில் வெற்றி பெற்றோம். நான் இப்போது நீட் தேர்வு எழுதினாலும் வெற்றி பெறுவேன். ஆனால் ஸ்டாலின் நீட் தேர்வு எழுதி வெற்றி பெறுவாரா? நானா? இல்லை அவரா? என பார்த்து விடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
‘நீட்’ தேர்வு பற்றி என்னவென்றே தெரியாத 5-ம் வகுப்பு மாணவர்களை ரோட்டில் நிறுத்தி கம்யூனிஸ்டு கட்சிக்காரர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். இது மன்னிக்க முடியாதது.
வேலூர் சி.எம்.சி.யில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் ‘நீட்’ எதிர்ப்பு என்று சொல்கிறார்கள். சி.எம்.சி. மீது பல வழக்குகள் உள்ளன. அங்கு 80 சதவீதம் இடங்கள் சிறுபான்மையினருக்குத்தான் கொடுக்கிறார்கள். 80 சதவீதம் பேரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். அப்படியானால் பெரும்பான்மையினருக்கு அங்கு மறுக்கப்படுகிறதா?.
இன்று நடிகர்கள் எல்லாம் படிப்பவர்களை பற்றி பேசுகிறார்கள். அது மகிழ்ச்சிதான். ஆனால் ‘நீட்’ தேர்வு பற்றி தவறாக புரிந்து கொண்டு பேசுகிறார்கள். நடிகர் சூர்யாவுக்கு ‘நீட்’ தேர்வு பற்றி என்ன தெரியும். இவர்கள் எல்லாம் பல கோடிக்கு நடித்துக்கொண்டு இருக்கும்போது நாங்கள் எல்லாம் தெருக்கோடியில் பணியாற்றிக்கொண்டு இருக்கிறோம்.
இவர்கள் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை மாணவர்கள் மத்தியில் பதிய வைக்க முயற்சிக்கிறார்கள். அதனால்தான் சொல்கிறேன், அனிதாவை கொன்றது ‘நீட்’ அல்ல. ‘நீட்’ அரசியல். பணத்தின் மீது நடந்த அரசியல், இன்று பிணத்தின் மீது நடக்க ஆரம்பித்து இருக்கிறது.

Related Tags :
Next Story