புதுவை மாநிலத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 942 வழக்குகளுக்கு தீர்வு


புதுவை மாநிலத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 942 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 9 Sep 2017 11:30 PM GMT (Updated: 9 Sep 2017 9:38 PM GMT)

புதுவை சட்டப்பணிகள் ஆணையத்தின் சார்பில் மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. சட்டப்பணிகள் ஆணைய வளாகத்தில் நடந்த இந்த மக்கள் நீதிமன்றத்தை மாநில சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலரும்,

புதுச்சேரி,

மாவட்ட நீதிபதியுமான சோபனாதேவி தொடங்கி வைத்து பேசினார்.
அவர் பேசும்போது, “நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், நேரடி வழக்குகள் ஆகியவை இந்த மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளன. இதற்காக புதுவையில் 9 அமர்வுகளும், காரைக்காலில் 2 அமர்வுகளும், மாகி, ஏனாமில் தலா ஒரு அமர்வுகளும் செயல்படுகிறது என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் புதுவை அரசின் சட்டத்துறை செயலாளர் செந்தில்குமார், வக்கீல்கள் சங்க தலைவர் திருக்கண்ண செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நேற்றைய மக்கள் நீதிமன்றத்தில் காசோலை வழக்குகள், வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், விவாகரத்து, ஜீவனாம்ச வழக்குகள், தொழிலாளர் வழக்குகள், வங்கிக்கடன் சம்பந்தப்பட்ட வழக்குகள் என மொத்தம் 4 ஆயிரத்து 100 வழக்குகள் தீர்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில் 3 கோடியே 72 லட்சத்து 371 ரூபாய் தீர்வு தொகையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு 942 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. இதில் ஏற்கனவே நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த 785 வழக்குகள் முடிவுக்கு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story