போலி பாஸ்போர்ட்டில் ஜெர்மனி சென்ற 2 பெண்கள் கைது
குஜராத் மாநிலம் மெசனா பகுதியை சேர்ந்த காஜல்பென் (வயது21). ஆமதாபாத்தை சேர்ந்த யாதனி (24) ஆகிய இரண்டு பெண்கள் மும்பையில் இருந்து ஜெர்மனிக்கு விமானத்தில் சென்றனர்.
மும்பை,
குஜராத் மாநிலம் மெசனா பகுதியை சேர்ந்த காஜல்பென் (வயது21). ஆமதாபாத்தை சேர்ந்த யாதனி (24) ஆகிய இரண்டு பெண்கள் மும்பையில் இருந்து ஜெர்மனிக்கு விமானத்தில் சென்றனர். அங்கு அந்த நாட்டு குடியுரிமை அதிகாரிகள் பாஸ்போர்ட்டை சோதனை செய்ததில் அது போலியானது என்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் காஜல்பென் இருவரையும் மும்பைக்கு திருப்பி அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து மும்பை குடியுரிமை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மும்பை வந்த 2 பெண்களையும் அதிகாரிகள் பிடித்து சகார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் டிராவல்ஸ் ஏஜெண்டு தீபக் என்பவரின் மூலம் போலி பாஸ்போர்ட் தயார் செய்ததாக தெரிவித்தனர். போலீசார் தீபக்கை பிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.