குமாரசாமி தலைமையில் ஜனதாதளம்(எஸ்) ஆட்சி அமைக்கும் கோலார் மாவட்ட தலைவர் பேச்சு


குமாரசாமி தலைமையில் ஜனதாதளம்(எஸ்) ஆட்சி அமைக்கும் கோலார் மாவட்ட தலைவர் பேச்சு
x
தினத்தந்தி 9 Sep 2017 11:34 PM GMT (Updated: 9 Sep 2017 11:33 PM GMT)

கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று ஜனதாதளம்(எஸ்) கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.

கோலார் தங்கவயல்,

கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று ஜனதாதளம்(எஸ்) கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஜனதாதளம்(எஸ்) தலைவர் வெங்கடசிவரெட்டி தலைமை தாங்கினார். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பக்தவச்சலம், கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் ஹரீஷ், லோகேஷ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வெங்கடசிவரெட்டி பேசியதாவது:–

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் நிச்சயமாக மாற்றம் நடக்கும். மக்கள் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜனதா மீது வெறுப்பில் உள்ளனர். குமாரசாமி தலைமையில் கர்நாடகத்தில் ஜனதாதளம்(எஸ்) ஆட்சி அமைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று குமாரசாமி தலைமையில் ஜனதாதளம்(எஸ்) ஆட்சி அமைப்பது உறுதி. கோலார் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில், 5 தொகுதிகளில் ஜனதாதளம்(எஸ்) வெற்றி பெறும். குமாரசாமியை வெற்றி பெற வைக்க தொண்டர்கள் அனைவரும் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story