செட்டாப் பாக்சுக்கு வைப்புத்தொகை; கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் எதிர்ப்பு

4 வித கட்டணங்களில் அரசு கேபிள் டி.வி. சேவை மற்றும் செட்டாப் பாக்சுக்கு வைப்புத்தொகை என்ற அறிவிப்பால் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
சேலம் மாவட்ட கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு தமிழக அரசு கேபிள் நிறுவனம் இலவச செட்டாப் பாக்ஸ் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று சேலத்தில் உள்ள சோனா கல்லூரி கூட்டரங்கில் நடந்தது. தனி தாசில்தார் பாலாஜி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட கேபிள் டி.வி. ஆபரேட்டர் காதர்கான் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தனி தாசில்தார் பாலாஜி கூறியதாவது:-
மாவட்டம் முழுவதும் 3 லட்சத்து 85 ஆயிரம் கேபிள் இணைப்புகள் உள்ளன, 1,300 கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் உள்ளனர். ஆபரேட்டர்கள் பலர் பொதுமக்களிடம் இருந்து வசூலித்த தொகை ரூ.5 கோடிவரை அரசுக்கு செலுத்தாமல் நிலுவை வைத்திருக்கிறார்கள். இதை உடனடியாக செலுத்திட வேண்டும்.
அரசு கேபிள் டி.வி. நிறுவனம் இணைப்பு உள்ள பொதுமக்களுக்கு அரசு இலவசமாக செட்டாப் பாக்ஸ் வழங்குகிறது. இதில் 4 வித கட்டணங்களில் (பேக்கேஜ்) சேவை வழங்கப்படுகிறது. அதாவது ரூ.125 கட்டணத்திற்கு 180 சேனல்களும், ரூ.175-க்கு 230 சேனல்களும், ரூ.225-க்கு 260 சேனல்களும், ரூ.275-க்கு 300 சேனல்களும் வழங்கப்படும். 4 வித கட்டணங்களில் தலா 158 சேனல்கள் இலவசமாகவும், மீதம் உள்ளவை கட்டண சேனலாகும்.
அத்துடன் பொதுமக்களுக்கு வழங்கப்படும் செட்டாப் பாக்ஸ் ஒன்றுக்கு கேபிள் ஆபரேட்டர்கள் 3 மாத வைப்புத்தொகையாக தலா ஒரு இணைப்புக்கு ரூ.375 செலுத்திட வேண்டும். இது அரசின் அறிவிப்பாகும். பொதுமக்களிடம் இருந்து எக்காரணத்தை கொண்டும் வசூலிக்கக் கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு செட்டாப் பாக்சில் ஒரே கட்டணத்தில் அனைத்து சேனல்களையும் கொடுக்க வேண்டும் என்றனர். அதைத்தொடர்ந்து கூட்டத்தை விட்டு அனைவரும் வெளியேறினர். பின்னர் தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநலச்சங்கம் சார்பில் தனித்தாசில்தார் பாலாஜியிடம் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவை அவர், உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்.
அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
அரசு கேபிள் கட்டுப்பாட்டு அறை மாவட்ட அளவில் கலெக்டர் அலுவலகத்திலும், தாலுகா அளவில் தாசில்தார் அலுவலகங்களிலும் அமைய வேண்டும். ஆபரேட்டர்கள் தங்கள் பகுதிக்கு அரசு சிக்னல் கொண்டு செல்ல யூஜி முறையில் சிக்னல் வழங்க வேண்டும். அதற்கான கட்டணத்தை அரசு கேபிள் டி.வி. நிர்வாகமே வழங்க வேண்டும். அரசு செட்டாப் பாக்ஸ் வைப்புத்தொகை எதுவாக இருந்தாலும் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்க வெளிப்படையாக அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு பேக்கேஜிலும் குறைந்த பட்சம் ஆபரேட்டர்களுக்கு ரூ.130 நிகர லாபம் கிடைக்க செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.
மேலும் கேபிள் டி.வி. ஆபரேட்டர் மாநில துணைத்தலைவர் தாமோதரன் கூறுகையில்,‘அரசு கேபிள் டி.வி.யில் நடக்கும் பல்வேறு குளறுபடிகளை கண்டித்தும், இலவசமாக செட்டாப் பாக்ஸ் வழங்கிட வலியுறுத்தியும் வருகிற 27-ந் தேதி சென்னையில் ஊர்வலம் நடத்தி, கவர்னரிடம் முறையிட உள்ளோம்” என்றார்.

Related Tags :
Next Story